கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் 'கேஜிஎஃப்'. இந்த படத்தில் யாஷ் ஹீரோவாக மிரட்டியிருந்தார் . இந்த படத்தை பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டிருந்தார்.
இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது. முதலிலேயே இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பூஜை தற்போது நடைபெற்றது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, இயக்குநர் பிரஷாந்த் நீல் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.