“என் உலகை ஆளும் தேவதை”- அக்ஷய திரிதியைக்கு கேஜிஎஃப் ஸ்டார் யாஷ் கொடுத்த ட்ரீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் நாயகன் யாஷ் தனது ரசிகர்களுக்கு அக்ஷய திரிதியை பரிசாக தனது மகளின் முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

KGF star Yash shared the first picture of his Baby captioned-The girl who rules my world

பிரஷாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் யாஷ், ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் கடந்த 2016ம் ஆண்டு ராதிகா பண்டித் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

‘கேஜிஎஃப்’ சேப்டர்-1 படத்தை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதற்கான படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனது மகளின் முதல் புகைப்படத்தை அக்ஷய திரிதியையை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கவிருப்பதாக யாஷின் மனைவி ராதிகா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, நடிகர் யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் உலகை ஆளும் தேவதை இவர் தான் - உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இன்னும் பெயர் வைக்காத எனது மகளை YR என்று தற்போதைக்கு அழைக்கலாம். உங்களது அன்பும், ஆசிர்வாதமும் அவளுக்கு தேவை’ என ட்வீட்டியுள்ளார்.