www.garudabazaar.com

எருமை முதல் சேவல் வரை.. "இதுக எல்லாம் என் ப்ரண்ட்ஸ்" 🤩.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வீடியோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் 'தசரா'.

Keerthy Suresh shared BTS Video of Dasara Movie

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார்.

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தரணி எனும் கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார்.

தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் & டிரெய்லர் 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் சில படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எருமை, பசு, ஆடு, சேவல், கோழிக்குஞ்சு ஆகியவற்றுடன் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh shared BTS Video of Dasara Movie

People looking for online information on Keerthy Suresh will find this news story useful.