www.garudabazaar.com

Biggboss 6 Tamil : "அவங்களுக்கு இன்னொரு Face இருக்கு".. முதல் நாமினேஷனில் குயின்ஸி கைகாட்டிய ஆள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் ஆறாவது சீசனில் முதல் நாமினேஷன் தொடர்பான ப்ரோமோ, இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

first nomination in Biggboss 6 Tamil new promo released

Also Read | GP Muthu : "இந்த காரணத்துக்குதான் அவர எனக்கு பிடிக்கும்.!" - GP முத்துவுக்கு கமல் புகழாரம்.!

கடந்த ஒரு வாரம் முன்பு தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ட்விஸ்ட், பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே இருப்பதால், போட்டியாளர்களும் இதனை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

first nomination in Biggboss 6 Tamil new promo released

இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. இதற்கு மத்தியில், வார இறுதியில் போட்டியாளர்களிடம் கமல் பேசும் எபிசோடுகளும் அரங்கேறும். அந்த வகையில், சமீபத்தில் போட்டியாளர்களுடன் கமல் கலந்துரையாடும் விஷயங்கள், பெரிய அளவில் சுவாரஸ்யத்தையும் உண்டு பண்ணி இருந்தது.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டின் முதல் நாமினேஷன் தொடர்பான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

first nomination in Biggboss 6 Tamil new promo released

அதன்படி, முதலாவதாக பேசும் ஆயிஷா, விக்ரமன் மற்றும் சிவின் ஆகியோர் பெயரை குறிப்பிடுகிறார். இதனைத் தொடர்ந்து பேசும் ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா பெயரை சொல்லி, கத்தி கத்தியே அனைத்தையும் அவர் சாதித்து விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர், குயின்ஸியை நாமினேட் செய்திருந்தார் ஜிபி முத்து. மேலும், ஒரு சிலரிடம் ஜாலியாக பேசும் அவர் மற்றவர்களிடம் பேசாமல் இருந்து வருவதாகவும் ஜிபி முத்து தெரிவிக்க, அது குயின்ஸியை தான் அப்படி சொல்கிறாரா அல்லது வேறு யாரையாவது அப்படி குறிப்பிடுகிறாரா என்பது முழு எபிசோடில் தான் தெரிய வரும்.

first nomination in Biggboss 6 Tamil new promo released

கடைசியாக பேசும் குயின்ஸி, ரச்சிதா பெயரை சொல்கிறார். பிறகு அவரிடம் இன்னொரு முகம் உள்ளது என்றும் அதை இன்னும் அவர் காட்டவில்லை என்றும் போட்டியாளர் ஒருவர் குறித்து குயின்ஸி சொல்லும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. முதல் வாரமே ஏராளமான விவாதங்கள் மற்றும் சண்டைகள் என பிக்பாஸ் களேபரமாகி இருந்த நிலையில், முதல் நாமினேஷன் குறித்த ப்ரோமோக்களும் இன்னும் விறுவிறுப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.

Also Read | Biggboss 6 Tamil : முதல் நாமினேஷனில் ஜிபி முத்து தேர்வு செய்த போட்டியாளர்!!.. பரபரப்பு காரணம்!!

தொடர்புடைய இணைப்புகள்

first nomination in Biggboss 6 Tamil new promo released

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Biggboss 6 Tamil first nomination week, Queency Stanly, Rachitha Mahalakshmi, Vijay Television will find this news story useful.