பிரபல திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன் மரணம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 07, 2019 06:51 PM
தமிழ் திரையுலகில் பிரபல பாடலாசிரியராக விளங்கியவர் முத்து விஜயன். இவர் நேற்று (செப்டம்பர் 6) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் விஜய் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் மேகமாய் வந்து போகிறேன், பிரபு தேவா நடித்த 'பெண்ணின் மனதை தொட்டு' படத்தில் கண்ணுக்குள் உன்னை வைத்தேன் போன்ற பாடல்களை எழுதியவர்.
தற்போது வரை தமிழ் சினிமாவில் இவர் சுமார் 800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் வசித்து வந்தார். இவர் பாடல் எழுவது மட்டுமல்லாமல் திரைக்கதை எழுதுவது, உதவி இயக்குநர் போன்ற பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளார்.
Tags : Muthu Vijayan, Lyricist