www.garudabazaar.com

மாலத்தீவில் கணவர் விக்கியுடன் கத்ரினா கைப்.. கூட இந்த பிரபல நடிகை வேற இருக்காங்க பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாலத்தீவில் இருந்து கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் புகைப்படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Katrina Kaif Vicky Kaushal at Maldives with Ileana D Cruz

Also Read | LIGER படத்தின் டிரெய்லர் ரிலீஸ்.. ஒரே நாளில் இரண்டு இடங்களில் விழா! களைகட்டும் அப்டேட்!

கத்ரீனா சமீபத்தில் தனது 39வது பிறந்தநாளை நடிகருடன் கொண்டாடினார். நடிகர் விக்கி கவுஷல் சமூக ஊடகங்களில் மனைவி கத்ரீனாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடி நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மாலத்தீவுக்கு சில நாட்களுக்கு முன் புறப்பட்டது.

Katrina Kaif Vicky Kaushal at Maldives with Ileana D Cruz

கத்ரீனாவின் 39வது பிறந்தநாளை அவருக்கு பிடித்த இடமான மாலத்தீவில் கொண்டாடினார்கள். புகைப்படத்தில், கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி ஒரு படகில் ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டது போல் புகைப்படம் அமைந்துள்ளது. கத்ரீனா வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார், ​​விக்கி வெள்ளை சட்டைக்கு பொருத்தமான தோற்றத்துடன் காணப்பட்டார்.  விக்கி கத்ரீனாவின் கையைப் பிடித்தபடி இருவரும் ஒரு பொன்னான தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

Katrina Kaif Vicky Kaushal at Maldives with Ileana D Cruz

முன்னதாக, கத்ரீனாவும் அவரது நண்பர்களும் மாலத்தீவில் இருந்து புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டனர், அதில் அவர் இசபெல் கைஃப், சன்னி கௌஷல், ஷர்வரி வாக் ஆகியோருடன் ஹேங்அவுட் செய்த போட்டோவாக அமைந்தது. நடிகர்கள் அங்கீரா தார் மற்றும் இலியானா டி'குரூஸ் ஆகியோரும் புகைப்படங்களில் காணப்பட்டனர்.

Katrina Kaif Vicky Kaushal at Maldives with Ileana D Cruz

மேலும், கத்ரீனா தனது பிறந்தநாளின் ஸ்னீக் பீக்கைப் பகிர்ந்துகொண்டு, "என் பிறந்தநாள்" என்று வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார்.  கத்ரீனா அடுத்து இஷான் கட்டர் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி ஆகியோருடன் திகில்-காமெடி திரைப்படமான போன் பூத்தில் நடிக்கிறார். குர்மீத் சிங் இயக்கிய இப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. மேலும் சல்மான் கான் நடித்த டைகர் 3 மற்றும் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்மஸ் ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

Katrina Kaif Vicky Kaushal at Maldives with Ileana D Cruz

Also Read | முதல்முறையாக வீடியோவில் நடிகை ப்ரணிதாவின் குழந்தை.. கொஞ்சி மகிழ்ந்த CUTE வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Katrina Kaif Vicky Kaushal at Maldives with Ileana D Cruz

People looking for online information on Ileana, Ileana D Cruz, Katrina Kaif, Maldives, Vicky Koushal will find this news story useful.