www.garudabazaar.com

நடிகர் கதிர் - திவ்ய பாரதி இணையும் படத்தின் செம்ம அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கதிர் - திவ்ய பாரதி இணையும் படத்திற்கு நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் படத்தின் பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Kathir and Divyabharathi new movie to getting a Ajith Movie Title

நடிகர் கதிர்

கடந்த 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய கதிர், அதனை தொடர்ந்து விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கதிர், சுழல் வெப் சீரிஸிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Kathir and Divyabharathi new movie to getting a Ajith Movie Title

இந்நிலையில் கதிர்  நடிகர் நடித்துவரும் புதிய படத்தினை Passion Studios நிறுவனம் தயாரித்து வருகிறது. இது மலையாளத்தில் மெகா ஹிட் ஆன ISHQ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் கதிருடன் நடிகை திவ்யபாரதி இணைந்துள்ளார் என தெரிகிறது.

Kathir and Divyabharathi new movie to getting a Ajith Movie Title

திவ்ய பாரதி

G.V. பிரகாஷ் குமார் நடித்த பேச்சுலர் படத்தில் திவ்யபாரதி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக ரிலீஸ் ஆனது. அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்த படத்தின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டாகினர்.

Kathir and Divyabharathi new movie to getting a Ajith Movie Title

இதனிடையே, கதிர் - திவ்யபாரதி நடிக்கும் படம் குறித்த புதிய தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, இந்த படத்துக்கு பிரபல நடிகர் அஜித் குமாருடைய பிளாக்பஸ்டர் படத்தின் பெயரை படக்குழு வைக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Kathir and Divyabharathi new movie to getting a Ajith Movie Title

People looking for online information on Ajithkumar, அஜித்குமார், கதிர், திவ்யபாரதி, Divyabharathi, Ishq, Kathir will find this news story useful.