www.garudabazaar.com

கருணாஸ் நடிப்பில் உருவாகும் ‘ஆதார்’.. ஜோடி சேரும் பிரபல பிக்பாஸ் நடிகை யார்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'ஆதார்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

Karunas starring aadhar biggboss riythivika female lead

'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பி.எஸ். ராம்நாத். இதில் நடிகர் கருணாஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'பிக்பாஸ்' புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார்.

Karunas starring aadhar biggboss riythivika female lead

இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், வத்திக்குச்சி படப்புகழ் திலீபன், 'பாகுபலி' பட புகழ் பிரபாகர், நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா இசை அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை கவனிக்க, படத்தொகுப்பை ஜெய் மேற்கொள்கிறார்.

Karunas starring aadhar biggboss riythivika female lead

'ஆதார்' படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பில்  சசிக்குமார் தயாரிக்கிறார்.

ALSO READ: கார்த்தியின் ‘சர்தார்’.. ‘அப்போ செம்ம ஆக்‌ஷன் பிளாக் இருக்கு!’.. வந்தாச்சு ‘மாஸ்’ அப்டேட்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Karunas starring aadhar biggboss riythivika female lead

People looking for online information on Aadhar, Karunas, Riythvika will find this news story useful.