மிரட்டலான தோற்றத்திற்கு மாறிய 'பரபல நடிகரின் மகன்'... யாருன்னு தெரியுதா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர், காதல் மன்னன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். மிக அழகான கொழுகொழு பாய்யாக கடல் திரைப்படத்தில் காணப்பட்டார்.

மிரட்டலான தோற்றத்தை வெளியிட்ட கவுதம்| Karthik gautham reveal stunning photo

என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்து ராமலிங்கம், இவன் தந்திரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் நடித்த ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக எல்லோரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலையில் கவுதம் கார்த்திக் வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்துவருகின்றார். இதில் ஆளே மாறி போய் மிகவும் மிரட்டலாக இருக்கிறார். தனது டிவிட்டர் பக்கத்தில்“ஒவ்வொரு மேகத்திற்குள்ளும் ஒரு சிறந்த புதையல் உள்ளது” என கடின உழைப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor