Nenjuku Needhi

கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படம் எப்போ ரிலீஸ்? வெளியான சரவெடி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் திரை அரங்கில் வெளியானது.  சுல்தானை அடுத்து சர்தார் படத்தில் கார்த்தி நடிக்க ஆரம்பித்தார்.

Karthi Starring Sardar Movie Releasing On Deepavali 2022

Also Read | இளையராஜா - ரஜினி காந்த் திடீர் சந்திப்பின் பின்னணி.. இதான் காரணமா? முழு தகவல்

சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன், விருமன் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பின்னர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

Karthi Starring Sardar Movie Releasing On Deepavali 2022

சென்னையில் சர்தார் படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் மைசூரில் நடைபெற்றது . இதற்காக படக்குழு சமீபத்தில் மைசூரு சென்றனர். நடிகை ராஸிகண்ணா - கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். 16 வருடங்களுக்கு பின் லைலா நடிக்க வருகிறார். லைலா ஏற்கனவே தீனா, பரமசிவன், நந்தா, பிதா மகன், மௌனம் பேசியதே, உன்னை நினைத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது  கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடிக்கிறார்.

Karthi Starring Sardar Movie Releasing On Deepavali 2022

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு புதிய போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.

Karthi Starring Sardar Movie Releasing On Deepavali 2022

அக்டோபர் 24, திங்கள் கிழமை தீபாவளி என்பதால் முன்கூட்டியே இப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. தெலுங்கு மொழியிலும் இப்படத்தின் போஸ்டர்கள் ரிலீசாகி உள்ளது.

Also Read | நடிகர் ஷாருக்கான் மகளின் பிறந்தநாள்.. வெளியான பெர்த் டே பார்ட்டி வைரல் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Starring Sardar Movie Releasing On Deepavali 2022

People looking for online information on Karthi, Sardar movie, Sardar Movie Release Updates will find this news story useful.