777 Charlie Trailer

மனைவி ரஞ்சனி எடுத்த CANDID போட்டோ.. பாராட்டி தள்ளிய நடிகர் கார்த்தி! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Karthi shared his candid picture clicked by ranjani

Also Read | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் T ராஜேந்தர்… சந்தித்து நலம் விசாரித்த கமல்… latest pic

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி, கடைசியாக  சுல்தான் படத்தில் நடித்திருந்தார்.

சுல்தானை அடுத்து சர்தார் படத்தில் கார்த்தி நடிக்க ஆரம்பித்தார். சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் பொன்னியின் செல்வன், விருமன் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Karthi shared his candid picture clicked by ranjani

விருமன் படம் ஆகஸ்ட் 31 அன்றும்,பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்றும் ரிலீஸ் ஆகின்றன. சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார்.

' சர்தார்', கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் படம்.

Karthi shared his candid picture clicked by ranjani

சமீபத்தில் இதன் படபிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில்  வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளுக்காக மட்டுமே அசர்பைசான் சென்று படமாக்கினார்கள். இதையடுத்து ஜார்ஜியாவிலும்  படமாக்கப்பட்டது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூபாய் 4 கோடி செலவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Karthi shared his candid picture clicked by ranjani

இந்நிலையில் நடிகர் கார்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோவை வெளியிட்டு "மிகச்சிறந்த கேன்டிட் போட்டோக்கள் மனைவிகளால் எடுக்கப்படுகின்றன. இந்த போட்டோ எடுக்கும் போது என்ன யோசனையில் இருந்தேன் என தெரியவில்லை" என கூறி, மனைவி ரஞ்சனி எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ரஞ்சனியை கார்த்தி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கந்தன், உமையாள் என‌ இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Also Read | கேரளாவில் மறு வீட்டுக்கு வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்..‌ இணையத்தில் Trend ஆகும் Cute Video!

தொடர்புடைய இணைப்புகள்

Karthi shared his candid picture clicked by ranjani

People looking for online information on Candid picture, Karthi, Karthi shared his candid picture, Ranjani Karthi will find this news story useful.