Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

ஜி.வி.பிரகாஷை இயக்கவுள்ள பிரபல ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’ பட இயக்குநர்..! அவரே போட்ட Post!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பிளான் பி திரைப்படத்தை இயக்கியவர் விக்னேஷ் கார்த்திக்.

Thittam Irandu Vignesh Karthick next directing GV Prakash

முன்னதாக பிஹைண்ட்வுட்ஸில் Yours Shamefully என்கிற குறும்பபடத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக், இதனை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா தயாரிப்பில் உருவான ‘ஏண்டா தலையில எண்ணெய் வெக்கல’ திரைப்படத்தை இயக்கினார்.

Thittam Irandu Vignesh Karthick next directing GV Prakash

இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனன்யா மற்றும் பலர் நடித்த ‘திட்டம் இரண்டு’ (பிளான் பி) என்கிற திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மாற்று பாலினத்தவர்கள் குறித்த மிகவும் வித்தியாசமான கதை களத்துடன் கூடிய திரில்லர் படமான இந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து தம்முடைய அடுத்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூடனான தன்னுடைய அடுத்த திரைப்படத்தை தொடங்கவிருப்பதாகவும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ மற்றும் விரிவான தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் விக்னேஷ் கார்த்திக் தம்முடைய சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அண்மையில் பேச்சிலர், ஐங்கரன், செல்ஃபி உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின.

Thittam Irandu Vignesh Karthick next directing GV Prakash

இந்த திரைப்படங்களை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் சூரரை போற்று இந்தி திரைப்படத்திற்கான இசையமைக்கும் பணியிலும், தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்துக்கான இசையமைப்பு பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். தவிர, இந்த வருடம் வெளியான தேசிய விருது அறிவிப்புகளில் கடந்த வருடம் சூரரை போற்று திரைப்படத்தில் இசையமைத்ததற்காக ஜி.வி.பிரகாஷ்க்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Thittam Irandu Vignesh Karthick next directing GV Prakash

People looking for online information on Aishwarya Rajesh, GV Prakash, GV Prakash Kumar, Soorarai Pottru, Suriya, Thittam Irandu, Vignesh Karthick will find this news story useful.