ஜோதிகா - கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ படத்தின் டிரைலர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி, ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'தம்பி'. இந்த படத்தை 'பாபநாசம்' பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.

Karthi, Joyothika Thambi Official Trailer out on Youtube

ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா - தம்பியாக நடித்துள்ள இந்த படத்தில் அவர்களுக்கு அப்பா, அம்மாவாக சத்யராஜ் மற்றும் சீதா நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக இந்த படத்தில் நிகிதா விமல் நடித்துள்ளார்.  மேலும் இந்த படத்தில் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்துக்கு 96 புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் 20-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஜோதிகா - கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ படத்தின் டிரைலர் இதோ! வீடியோ