www.garudabazaar.com

VIDEO: ராஜூ முருகன் இயக்கும் புதிய படம்.. கார்த்தி கேரக்டர் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி & ராஜூ முருகன் இணையும் புதிய படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த தகவலை கார்த்தி பகிர்ந்துள்ளார்.

Karthi About His Character in Raju Murugan New Movie

Also Read | சர்தார் படத்தின் வெற்றி.. நடிகை ரஜிஷா வெளியிட்ட வைரல் ஃபோட்டோ.. கமெண்ட் செய்து அசத்திய லைலா!

'விருமன்'  'பொன்னியின் செல்வன்' படங்களுக்கு பிறகு கார்த்தி நடித்து  வெளியான திரைப்படம்  சர்தார்.

சர்தார் படத்தினை அடுத்து கார்த்தி, இயக்குனர் ராஜூமுருகனுடன் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தது.

சில மாதங்களுக்கு முன் விருமன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் ராஜூ முருகன் இந்த தகவலை உறுதி செய்தார். விருமன் படத்தில் மதுரை வீரன் பாடலை ராஜூ முருகன் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Karthi About His Character in Raju Murugan New Movie

எழுத்தாளரும், இயக்குனருமான ராஜூ முருகன் கடந்த 2014 ஆம் ஆண்டு 'குக்கூ' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கிய இரண்டாவது படம் ஜோக்கர். இது சமூகத்தை கேள்வி கேட்கும் நாயகனின் கதையை அடிப்படையாகக் கொண்டு தேசிய விருதை வென்றது. இந்தப் படம் பெரும்பான்மையான மக்களால் பாராட்டப்பட்டது. கடைசியாக 'ஜிப்சி' படத்தை ராஜூ முருகன் இயக்கினார்.

Karthi About His Character in Raju Murugan New Movie

கார்த்தி & ராஜூ முருகன் இணையும் இந்த புதிய படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு 'ஜப்பான்' என்று பெயரிடப்பட்டுள்ளது என‌வும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Karthi About His Character in Raju Murugan New Movie

இந்நிலையில் சர்தார் படத்தின் வெற்றி விழாவில் கார்த்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் "தனது அடுத்த படமான இயக்குனர் ராஜூ முருகன் இயக்கும் புதிய படத்தில் தனது கதாபாத்திரம் வித்தியாசமானது. படத்தின் போஸ்டர் வெளியாகும் போது அது தெரியும்" என கார்த்தி கூறியுள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் முதல் துவங்குகிறது.

Also Read | "இந்திய சினிமாவில் MASTERPIECE".. 'காந்தாரா' படம் பார்த்து வியந்த ரஜினிகாந்த்! வைரல் ட்வீட்

VIDEO: ராஜூ முருகன் இயக்கும் புதிய படம்.. கார்த்தி கேரக்டர் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi About His Character in Raju Murugan New Movie

People looking for online information on Karthi, Ponniyin Selvan 1, Raju murugan, Raju Murugan New Movie, Sardar will find this news story useful.