www.garudabazaar.com

சூப்பரு... டிவி சேனலில் ஒளிபரப்பாக போகும் கர்ணன் திரைப்படம்! எந்த சேனல்ல தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான "கர்ணன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வணிக ரீதியிலும், கலை ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது.

karnan movie television premiere date will announced

தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் கர்ணன் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

karnan movie television premiere date will announced

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன. படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தன.

Seven Samurai, Bacurau and Les Misérables போன்ற உலக படங்களின் தாக்கம் கர்ணன் திரைப்படத்தில் இருந்தததாக விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பெற்றது. தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியிருந்தது. இந்த படத்தின் ஒடிடி உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியது. ஒடிடி பிரீமியர் மே 14ம் தேதி ஒளிபரப்பானது.

karnan movie television premiere date will announced

இந்த படத்தின் தொலைக்காட்சி சேட்லைட் உரிமையை ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது. ஆகையால் கர்ணன் படத்தின் தொலைக்காட்சி பிரீமியர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக ஜி தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்ணன் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

karnan movie television premiere date will announced

People looking for online information on Dhanush, Kalaipuli S. Dhanu, Karnan Tamil, Yogi Babu will find this news story useful.