www.garudabazaar.com

"அயராது உழைத்து வெற்றி" - ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி ரஜினி பரபரப்பு ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.

Rajinikanth wishes MK Stalin for DMKs victory in TNElections2021

இன்று காலை 8 மணி முதலே தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் பிரபல பழம்பெரும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்தது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்களால் வாழ்த்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Rajinikanth wishes new Chief minister MK Stalin DMK

பொதுமக்களும் ஆங்காங்கே இந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். இதனிடையே வீதிக்கு வந்து கொண்டாடி, கூட்டம் கூடி இந்த வெற்றியை கொண்டாட கூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதேபோல் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வகையில் இந்த வெற்றியை அனைவரும் அமைதியாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் வெற்றியை பாராட்டும் வகையில் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அத்துடன் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரிலும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்,  இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், “நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சிசெய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி! வெற்றி பெற்றதும் முதல் 'பேட்டியில்' சொன்னது என்ன தெரியுமா?!

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth wishes MK Stalin for DMKs victory in TNElections2021

People looking for online information on MKStalin, Rajinikanth, TNElections2021 will find this news story useful.