www.garudabazaar.com

"சீக்கிரமா போய்ட்டீங்களே கே.வி.ஆனந்த் சார்.. ரொம்ப சீக்கிரமா!".. தனுஷ் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

gone too soon Sir RIP KVAnand Sir Dhanush heartbreaking

அவருக்கு வயது 54. அயன், கோ, அனேகன் உள்ளிட்ட படங்கள் மூலம் திரைத்துறையில் அழுத்தமான முத்திரை பதித்த இயக்குநர் கே.வி.ஆனந்த் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர். ரஜினி நடித்த சிவாஜி உட்பட ஷங்கர் இயக்கிய பாய்ஸ், முதல்வன் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாலராக பணியாற்றியவர்.

இவரது திரைப்பயணத்தில் சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, ஜீவா உள்ளிட்ட நடிகர்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவரது மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய திரைப்படம் அனேகன். வித்தியாசமான திரைக்கதையும் கதைக்களமும் கொண்ட இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு மென்மையான, நேர்மையான மனிதர் காலமானார். வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த மிக இனிமையான மனிதர். K.V.ஆனந்த் சார் .. மிக விரைவில் சென்றுவீட்டீர்களே சார். மிக விரைவில். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். ஆன்ம சாந்தி பெறுங்கள் k.V சார்.” என குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: "ரொம்ப அதிர்ச்சியா இருக்கு!".. KV ஆனந்த்-ன் ஆஸ்தான மியூசிக் டைரக்டர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கம்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

gone too soon Sir RIP KVAnand Sir Dhanush heartbreaking

People looking for online information on Anegan, Dhanush, K.V.Anand, KV Anand will find this news story useful.