#Breaking: சூப்பர் ஹிட் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய கவுதம் மேனன்!
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை : Garuda Gamana Vrishabha Vahana என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் மற்றும் நடிகரான கவுதம் வாசுதேவ் மேனன் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிறமொழி படங்கள்
கன்னடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான "Garuda Gamana Vrishabha Vahana" கடந்த வருடத்தின் கன்னடத்தில் வெளிவந்த படங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படமாகும். விமர்சன ரீதியாக மற்றும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலையும் அள்ளியது. U Turn, KGF வரிசையில் இந்தப் படமும் கன்னட சினிமாவின் முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது.
படக்குழு
நடிகர் மற்றும் இயக்குனர் ராஜ் பி செட்டி இப்படத்தை இயக்கியதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரவி ராய் கலாசா மற்றும் வச்சான் செட்டியின் புத்தா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ராஜ் பி ஷெட்டியுடன், ரிஷாப் ஷெட்டியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மிதுன் முகுந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு இரண்டையும் பிரவீன் ஷ்ரயன் செய்திருக்கிறார்.
மிகப்பெரிய தாக்கம்
ராஜ் பி ஷெட்டி மற்றும் ரிஷாப் ஷெட்டி இருவரும் சிவா மற்றும் விஷ்ணு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். சிவாவாக நடித்திருக்கும் ஹீரோ சிறு வயதில் பிச்சை எடுக்கும் காட்சிகளில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர். பேப்பர் வெயிட்டை எடுத்து அடிக்கும் காட்சியாகட்டும், ரத்தம் படிந்த பேப்பர் வெயிட்டை காட்டும்போது ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார் கதையின் நாயகன். ஒவ்வொரு கொலை நடக்கும் போதும் அவர் அணிந்திருந்த ஷூ முதற்கொண்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சிவா விஷ்ணு என்ற இரண்டு கதாபாத்திரம் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவிற்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரமும் ரசிகர்களை ஈர்த்தது. இந்த படத்தின் பின்னணி இசையில் மிரள வைத்துள்ளார் மிதுன் முகுந்தன். ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படம், தமிழில் ரீமேக் செய்யப்படுமா என்று பெருமளவு எதிர்பார்க்கப்பட்டது.
ரீமேக் உரிமை
பொதுவாக பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வதும் தமிழ் மொழி படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம். தமிழ் படங்களும் பெரும்பாலும் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும். இது PAN இந்தியா படம் இல்லை என்பதால் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தை தமிழில் முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ரீமேக் செய்ய இருக்கிறார்.
எதிர்பார்ப்பு
தமிழ் திரையுலகில் "மின்னலே" படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கௌதம் மேனன். இவர் இயக்கும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் காதல் கதைகளாக இருக்கும். இவர் தற்போது நடிகர் சிம்புவை வைத்து "வெந்து தணிந்தது காடு" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் Garuda Gamana Vrishabha Vahana படத்தைப் பார்த்த இவர் இப்படத்தை ரீமேக் செய்ய விருப்பம் உள்ளதாக கூறி இருக்கிறார். இவர் படங்களில் எல்லாம் டைட்டில்கள் வித்தியாசமாக இருக்கும். இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் அடுக்கு மொழியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் கௌதம் மேனன் முதல் முறையாக ரீமேக் செய்வதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை இப்படம் பெற்றுள்ளது. சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் கவுதம் மேனன், இந்த படத்திலும் பட்டையைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இயக்குனர் ராஜ் பி செட்டி இப்படத்தில் நடித்து இருப்பதனால், இயக்குனராக மட்டும் இல்லாமல், பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் நடித்து வரும் கவுதம் வாசுதேவ் மேனன், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.