www.garudabazaar.com

காப்பித்தூளை எடுத்து வெச்சுக்குறீங்க.. கேவலமா இருக்கு.. முட்டிய சண்டை.. முடிவுதான் செம! BBUltimateTamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை 03, பிப்ரவரி 2022:- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இதுவரை 5  சீசன்களாக நடந்து வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது.

vanitha abhirrami arguement coffee powder BBUltimate Tamil

பிக்பாஸ் தமிழ் 5வது சீசன் ஃபினாலே

இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த ஐந்தாவது சீசனின் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது அதை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நடிகர் கமல்ஹாசன் ஒரு புதிய அறிவிப்பை அந்த நிகழ்ச்சியில் மேடையிலேயே வைத்து அறிவித்திருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் நேரலையில் ஒளிபரப்பாகும், அத்துடன் ஒரு மணி நேர நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார்.

vanitha abhirrami arguement coffee powder BBUltimate Tamil

பிக்பாஸ் ஓடிடி

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் இந்த அறிவிப்பினை அறிவித்திருந்தார். அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் வரவிருப்பதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். அந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் அல்டிமேட் தமிழ் என்று பெயர் சூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து முந்தைய சீசன் போட்டியாளர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். பின்னர் அது தொடர்பான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின.

vanitha abhirrami arguement coffee powder BBUltimate Tamil

பிக்பாஸ் அல்டிமேட்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஓடிடி சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரஸ்மீட் டாஸ்க் முதற்கட்டமாக நடந்து வருகிறது. இதில் அனைவரும் செலிபிரிட்டி போல் அமர்ந்து மற்ற போட்டியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். மற்ற போட்டியாளர்கள் குறிப்பிட்ட ஒரு போட்டியாளரை நோக்கி கேள்விகளை எழுப்பலாம். இந்த டாஸ்கில் சண்டை வெடித்தது.

vanitha abhirrami arguement coffee powder BBUltimate Tamil

வனிதா மற்றும் அபிராமி இருவருக்கும் சண்டை

இதனைத் தொடர்ந்து தற்போது வனிதா மற்றும் அபிராமி இருவருக்கும் சண்டை வெடித்திருக்கிறது. நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் அபிராமி ஆகியோர் முந்தைய சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இதில் அபிராமி தன்னுடைய முன்னாள் காதலி என்று இந்த ஓடிடி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இதே நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் போட்டியாளர் நிரூப் குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் அபிராமி, தான் பார்த்த முந்தைய அபிராமி போல் இல்லை, அவரிடம் நிறைய மாற்றம் இருக்கிறது, அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என கூறி அபிராமியை நிரூப் நாமினேட் செய்திருந்தார். ஆம் இந்த நிகழ்ச்சியில் நாமினேஷன் ப்ராசஸ் எடுத்த எடுப்பிலேயே தொடங்கப்பட்டு விட்டது.

Also Read: நடிகர் விமல்.. சைலண்ட்டா ஒரு சம்பவத்த பண்ணிருக்காரே!.. ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர்!

காப்பித் தூள் என்னிடம் தான் இருக்கும்..

vanitha abhirrami arguement coffee powder BBUltimate Tamil

இந்த நிலையில்தான் அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார் இருவருக்கும் இடையே சண்டை முட்டி கொண்டுள்ளது. வனிதா விஜயகுமார் கிச்சனில் இருந்து காப்பி தூளை எடுத்து கொண்டு வந்து, தான் வைத்துக்கொண்டார். இதை தட்டி கேட்க சென்ற அபிராமி, “இதை எல்லாரும் சேர்ந்து டாஸ்க் விளையாடி தான் வாங்கி இருக்கிறோம். நீங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டால் என்ன அர்த்தம்?” என்று கேட்டதற்க, வனிதா விஜயகுமார், “எங்களுடைய டீம்தான் ஜெயித்தது. அதனால் காப்பித் தூள் என்னிடம் தான் இருக்கும்” என்று கூற, “இது நாங்களும் விளையாடியதால் தான் கிடைத்தது” என்று அபிராமி கூற இருவருக்கும் வாக்குவாதம் முற்றிக் கொண்டது.

கேவலமாக இருக்கிறது...

vanitha abhirrami arguement coffee powder BBUltimate Tamil

அப்போது வனிதா விஜயகுமார், “இது கேவலமாக இருக்கிறது அபி” என்று கூற, பதிலுக்கு அபிராமியும், “நீங்கள் பண்ணுவதுதான் கேவலமாக இருக்கிறது” என்று கூறி வாதாடினார். அதன் பிறகு, “இந்த காப்பி நீ எனக்கு வேண்டாம்” என்று அந்த காபி பொடி டப்பாவை தூக்கிப் போட்டுவிட்டு வனிதா சென்றுவிட்டார். இப்படி பரபரப்பான புரோமோ தற்போது வெளியாக இருக்கிறது.

Also Read:அமீர் & வெற்றிமாறனின் புதிய படம்.. கதை யாரு? டைரக்‌ஷன் யாரு?.. பரபரப்பு போஸ்டர்.. அமீர் விளக்கம்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vanitha abhirrami arguement coffee powder BBUltimate Tamil

People looking for online information on Abhirami, BBUltimateTamil, Bigg Boss Ultimate Tamil, Vanitha Vijayakumar will find this news story useful.