www.garudabazaar.com

"பிரபலங்களின் 'Divorce'.." ஒரே போடாக போட்ட ராம் கோபால் வர்மா.. கடுப்பாகி கொந்தளிக்கும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தன்னுடைய 18 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பின், தனது மனைவியும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக ட்விட்டரில் அறிவித்தார்.

ramgopal varma controversial tweets about celebrity divorce

காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியரின் இந்த முடிவு, அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும், அவர்களின் முடிவை ஏற்று, விரைவில் இதனைக் கடந்து வர வேண்டி, சிறந்த கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா, 'நட்சத்திரங்களின் விவாகரத்து என்பது, திருமணத்தின் ஆபத்தைப் பற்றி, இளைஞர்களை எச்சரிக்கும் சிறந்த டிரெண்ட் செட்டர்' என குறிப்பிட்டுள்ளார். அதே போல, மற்றொரு ட்வீட்டில், கல்யாணத்தை விட, காதலை வேகமாக கொலை செய்யக் கூடியது எதுவுமே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

வேறொரு ட்வீட்டில், 'ஸ்மார்ட் ஆனவர்கள் காதல் செய்வார்கள். Dumbos தான் திருமணம் செய்து கொள்வார்கள்' என குறிப்பிட்டுள்ளார். இப்படி திருமணத்தைக் குறித்து, சுமார் 5 ட்வீட்கள் வரை ராம் கோபால் வர்மா செய்துள்ளார்.

 

 

தான் சொல்லும் கருத்துக்கள் மூலம், அதிகம் சர்ச்சைகலில் மாட்டிக் கொள்பவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. தற்போது நடிகர் தனுஷ் விவாகரத்து செய்துள்ள நிலையில், திருமணம் செய்வது தவறு என்றும், பிரபல நட்சத்திரங்களின் விவாகரத்து, திருமணத்தின் ஆபத்தை எச்சரிக்கக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது, தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

 

இதன் காரணமாக, அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில், தேவை இல்லாமல் கருத்துக்களைக் கூற வேண்டாம் என்றும், பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

ramgopal varma controversial tweets about celebrity divorce

People looking for online information on Celebrity, Divorce, Ram Gopal Varma will find this news story useful.