www.garudabazaar.com

நடிகர் சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த டைரக்டரா??".. பரபரப்பு தகவல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வைபவ், பிரியா பவானி ஷங்கர், இந்துஜா நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கியிருந்தார்.

Is Santhanams next movie directed by this director?

இந்த திரைப்படம் பெருவாரியான வரவேற்பைப் பெற்று இளைஞர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கிய திரைப்படம் ‘ஆடை’.

மிகவும் சவாலான ஒளிப்பதிவு காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தில் அமலாபால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

Is Santhanams next movie directed by this director?

நடிகர் சந்தானம் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் நேரடியாக வெளியான திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ்.  முழுக்க முழுக்க கானா பாடகரின் காதல்-குடும்ப வாழ்வை மையப்படுத்தி காமெடி பாணியில் உருவான இந்த திரைப்படம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

Is Santhanams next movie directed by this director?

இதனிடையே சந்தானத்தின் டைம் ட்ராவலர் காமெடி திரைப்படமான ‘டிக்கிலோனா’ படத்தின் டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றது. யோகிபாபு, முனீஷ்காந்த், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல கமல்ஹாசனின் பாடலான, ‘பேர் வெச்சாலும்’ பாடல் இந்த படத்தில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. ‘டிக்கிலோனா’திரைப்படத்தின் வெளியீட்டுக்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Is Santhanams next movie directed by this director?

முன்னதாக சந்தானம் நடித்த பிஸ்கோத்து திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து சந்தானம் ஹீரோவாகவும், அவரது தந்தையாக எம்.எஸ்,பாஸ்கரும் நடித்து உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. 

Is Santhanams next movie directed by this director?

இந்த நிலையில் சந்தானத்துடன் ரத்னகுமார் கைகோர்க்கும் இந்த திரைப்படம் எந்த மாதிரி ஜானரியில் இருக்கும்? சந்தானத்துடன் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள்? இந்த படத்தில் இணையவிருக்கும் ஹீரோயின்கள் யார்? என்பது குறித்த பல கேள்விகளுக்கு பதிக் தெரியும் வகையில், இந்த கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

ALSO READ: "கத கேக்கும்போது Hero-னு நெனைச்சு ஏமார்ந்துடுவேன்!".. முதல் பட பூஜை.. அஸ்வின் உருக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Is Santhanams next movie directed by this director?

People looking for online information on Rathnakumar, Sabhaapathy Tamil, Santhanam will find this news story useful.