“அது இன்னும் லோகேஷ்க்கே தெரியாது”... ‘விக்ரம் 3’ பற்றி press meet-ல் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Kamal talked about vikram 3 director lokesh surprise

விக்ரம் உருவாக்கம்…

கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. படத்துக்கு U A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Kamal talked about vikram 3 director lokesh surprise

விக்ரம் ரிலீஸ்…

திரையில் கமல்ஹாசனைப் பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகாகவே இருந்துவரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.  படத்தை தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

Kamal talked about vikram 3 director lokesh surprise

விக்ரம் 3 இயக்குனர்…

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் நடிகர் கமலும், இயக்குனர் லோகேஷும் கலந்துகொண்டனர். அப்போது பத்திரிக்கையாளரின் பல கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார். அதில் சர்ப்ரைஸாக விக்ரம் 3 பற்றி ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த கமல் “விக்ரம் 3 படத்தை நீங்கள் இவரிடம்தான் (லோகேஷ்) கேட்கவேண்டும். ஏனென்றால் அந்த படத்துக்கும் இவர்தான் இயக்குனர் என்று நான் முடிவு செய்துவிட்டேன். அவரிடமே கேட்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Kamal talked about vikram 3 director lokesh surprise

தொடர்புடைய இணைப்புகள்

Kamal talked about vikram 3 director lokesh surprise

People looking for online information on KAMALHAASAN, Lokesh Kanagaraj, Press Meet, Vikram will find this news story useful.