“21 வயதில் இப்படி ஒரு படமா”…’மாலை நேர மல்லிப்பூ’ இயக்குனரை பாராட்டிய மூத்த கலைஞர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”.
Also Read | சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’… இதுவரை வெளிவராத BTS pics
கதைக்களம்…
சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாக பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் வசந்த் பேசுகையில்…
நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த் கலந்து கொண்டு பேசும் போது, “எல்லோருக்கும் வணக்கம். இந்தப் படத்தோட இயக்குநர் சஞ்சய் நாராயணன் 21 வயசுலயே நினைக்க முடியாத ஒரு சப்ஜெக்ட பர்ஸ்ட் படத்துல எடுத்ததுக்காகவே நீங்கெல்லாம் கை தட்டலாம். நான் இன்னும் முழுப் படமும் பார்க்கவில்லை. ஆனாலும் இங்கு காட்டிய சின்ன சின்ன க்ளிப்ஸ் பார்க்கும் போது முதல் பட இயக்குநர் போலத் தெரியவில்லை. பல படங்களை எடுத்த அனுபவமிக்க இயக்குநர் எடுத்த மற்றொரு படம் போலத்தான் இது இருக்கிறது. இந்தப் படத்தோட இயக்குநரைப் பாராட்டுவது போலவே இப்படத்தை தயாரித்திருக்கும் இயக்குநரின் தாய் விஜயலெக்ஷ்மி அவர்களுக்கும் என் பாராட்டுக்கள். இந்தப் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று பேசினார்.
படத்தின் இயக்குனர் சஞ்சய் பேசுகையில்…
படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் பேசும் போது, “ இது ஒரு சின்ன படம். ரொம்ப ரொம்ப சின்னப் படம். இதற்கு நீங்கள் இவ்வளவு ஆதரவு தருவது, இந்த ஹால் முழுக்க நிரம்பி இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எங்கள் படத்தின் டிரைலரை ஆன்லைனில் வெளியிட்ட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் சாருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு வந்திருக்கும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவை எங்களுக்குக் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் படக்குழுவினர் அனைவருமே எனக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் என் தாய்க்கும் நன்றிகள்.” என்று பேசினார்.
மூத்த இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில்…
கே எஸ் ரவிக்குமார் பேசுகையில் “அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் பாலச்சந்தர் அரங்கேற்றம் படம் எடுப்பதற்கு முன்னர் பல படங்கள் எடுத்துவிட்டார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் தன் முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் தாய் மகனுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பை தன் கதையாக எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். இயக்குநரை முதலில் நேரில் பார்க்கும் போது, அவருக்குள் என்ன மாதிரியான விசயங்கள் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இன்று அவர் மேடையில் பேசும் போதும், அவரின் படைப்பைப் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கிறது.” என்று கூறினார்.
பட நாயகி வினித்ரா பேசுகையில்…
நாயகி வினித்ரா மேனன் பேசும் போது, “இந்த படக்குழுவைப் பார்க்கும் போது இவர்களை நம்பலாமா..? என்று தோன்றியது. ஏனென்றால் என்னைவிட அனைவரும் இளையவர்களாக இருந்தார்கள். ஆனால் கதையை படித்ததும் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அது போல் இயக்குநரின் அம்மா இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டும் இல்லை. மிகவும் சவால் நிறைந்த கதாபாத்திரம். அதை எடுக்கும் போது பல தருணங்களில் நாங்கள் எல்லோருமே உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினோம். இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. என்னால் முடிந்த அளவிற்கு இப்படத்தில் நான் சிறப்பாக நடித்திருக்கிறேன். இப்படத்திற்கு நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவை கொடுத்து உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று பேசினார்.
Also Read | தங்கர் பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன் & யோகிபாபு… Title உடன் வெளியான அப்டேட்!