கேன்ஸ் படவிழாவில் கமல்ஹாசனை சந்தித்த A.R. ரஹ்மான்.. ஆண்டவர் கெட்டப் வேறலெவல்! வைரல் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நேற்று (17.05.2022) தொடங்கி உள்ளது.

Kamal Haasan Meets A R Rahman at Cannes Film Festival

Also Read | "இணை எழுத்தாளர் கூட" மனைவியுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்து.. AR Rahman போட்ட கேப்ஷன்..

75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவின் தலைவராக பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் இருப்பார். ஜூரியில் தீபிகாவுடன் இணைந்து நடிகர்-இயக்குனர் ரெபேக்கா ஹால், நூமி ராபேஸ் மற்றும் இத்தாலிய நடிகர்-இயக்குனர் ஜாஸ்மின் டிரின்கா மற்றும் இயக்குநர்கள் அஸ்கர் ஃபர்ஹாடி, லாட்ஜ் லை, ஜெஃப் நிக்கோல்ஸ் மற்றும் ஜோச்சிம் ட்ரையர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களை மே 28 ஆம் தேதி கேன்ஸில் நடைபெறும் விழாவில் நடுவர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

Kamal Haasan Meets A R Rahman at Cannes Film Festival

இந்த விழாவில், இந்திய திரைப்படங்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள், திரையிடப்படவுள்ளது. அதே போல, பல நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியாவின் சார்பில், பா.ரஞ்சித், தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் மாதவன், பார்த்திபன், கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கியுள்ள 'லி மஸ்க்' திரைப்படம், மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் படம், நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள, நான் லீனியர் திரைக்கதையில், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படமான இரவின் நிழல் & கமல் நடித்த 'விக்ரம்' படத்தின் டிரெய்லர் ஆகியவை, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

Kamal Haasan Meets A R Rahman at Cannes Film Festival

Vistaverse மற்றும் Lotus Meta Entertainment உடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மே 18-ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் என்று ராஜ்கமல் நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனும், A.R ரஹ்மான் கேன்ஸ் படவிழாவின் துவக்க நாளில் சந்தித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் மாதவன், நாவாசுதீன் சித்திக் ஆகியோர் முதல் நாளில் தென்பட்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

Kamal Haasan Meets A R Rahman at Cannes Film Festival

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Meets A R Rahman at Cannes Film Festival

People looking for online information on AR Rahman, Cannes Film Festival, Kamal Haasan will find this news story useful.