LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

இந்தியன்-2 படத்தில் இணைந்த உதயநிதி ஸ்டாலின்.. புதிய போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன்.

Kamal Haasan Indian2 Movie New Poster Red Giant Movies

ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களை எதிர்க்கும் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

Kamal Haasan Indian2 Movie New Poster Red Giant Movies

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார், ஜீவா ஒளிப்பதிவு செய்தார்.

1996-ஆம் ஆண்டு அகாடமி விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான விருதுக்கு 'இந்தியன்' படம், இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வந்தது. இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா மற்றும் பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பின் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்தார். விக்ரம் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Kamal Haasan Indian2 Movie New Poster Red Giant Movies

விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் இந்தியன் 2 படம் மீண்டும் துவங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றன என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியன்-2 படத்தில் தயாரிப்பாளராக லைக்கா நிறுவனத்துடன் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்துள்ளது. இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Indian2 Movie New Poster Red Giant Movies

People looking for online information on Indian2, Kamal Haasan, Red Giant Movies, Shankar, Udhayanidhi Stalin will find this news story useful.