www.garudabazaar.com

இந்தியன்-2.. அடுத்து இந்த நாட்டில தான் ஷூட்டிங்.. ஷங்கர் & கமல் பகிர்ந்த செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Kamal Haasan Indian 2 Shooting Update Taiwan South Africa

தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் Game Changer தெலுங்கு படத்தையும் இந்தியன் 2 படத்தினையும் ஒரு சேர இயக்கி வருகிறார்.

மேலும் ஒரு இந்திப் படத்தில் பணியாற்றவும் ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.  ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர்.

இதில் RC15 படத்தில் ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

அதேபோல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில்  நடைபெற்று வருகிறது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

 

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

 

முந்தைய இந்தியன் 2 ஷூட்டிங் கல்பாக்கம் டச்சுக் கோட்டையில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு, தைவான் நாட்டில் நடைபெற்று வந்தது. தற்போது தைவான் நாட்டில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் & கமல்ஹாசன், தைவான் நாட்டில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் தைவான் நாட்டில் இருந்து நேரடியாக தென் ஆப்ரிக்கா நாட்டிற்கு படப்பிடிப்புக்காக இந்தியன் 2 படக்குழு பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Indian 2 Shooting Update Taiwan South Africa

People looking for online information on Indian2, Kamal Haasan, Shankar will find this news story useful.