கமல் களமிறங்கும் வெர்ல்டு கப் கிரிக்கெட்- ‘…இதற்காக மகிழ்ச்சியும் கர்வமும் கொள்கிறேன்’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா துறையில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல், நடனம், எழுத்து என்று பல்வேறு தரப்பில் பணியாற்றி தனக்கென நீங்காத இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் கமல். தான் இயக்கி நடித்த ’விஸ்வரூபம் 2’ படத்தைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ’இந்தியன் 2’வில் நடித்து வருகிறார்.

Kamal Haasan gets the Tamilnadu Rights for 83 movie Jeeva Ranveer Singh Cricket Worldcup movie

இதில் அவருடன் நடிகை காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா,  ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா என்று ஏராளமானோர் நடித்துவருகின்றனர். இந்த படம் நிறைவடைவதற்குள் கமல் ஒரு பாலிவுட் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.

83 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 1983ம் ஆண்டு இந்தியா வெற்றியடைந்த உலக க்கோப்பை கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு சித்தரிக்கிறது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவின் வேடத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் நடிக்க, நடிகர் ஜீவா கிரிஷ் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தமிழக வினியோக உரிமையை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும், ஒய் நாட் ஸ்டுடியோஸும் இணைந்து பெற்றுள்ளது.

இது பற்றி கமல்ஹாசன் கூறும்போது ‘வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என்று மும்மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Entertainment sub editor