ஜீவா முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்தாக நடிக்கும் ’83’ படத்தில் நியூ லுக் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 12, 2020 06:55 PM
கபில் தேவின் வாழ்வைத்தழுவி இந்தியில் உருவாகி வரும் 83 படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை சல்மான் கானை வைத்து ‘பஜ்ரங்கி பைஜான்’ படத்தை இயக்கிய கபீர் கான் இயக்குகிறார்.

சஜித் நெடியத்வாலா, மது மந்தனா, ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ், விஷ்ணு இந்தூரி, தீபிகா படுகோன் ஆகியோர் ஒன்றாக இப்படத்தை தயாரிக்கின்றனர். பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து வரும் ஏப்ரல் மாதம் 83 வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் கிரிக்கெட்வீரர் ஸ்ரீகாந்தின் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். இவரது கேரக்டர் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் சுனில் கவாஸ்கராக நடிக்கும் தாஹிர் ராஜின் கேரக்டர் லுக்கும் உடன் வெளியாகி உள்ளது. தமிழில் ஜீவாவின் நடிப்பில் இறுதியாக வெளியான கீ படத்தைத் தொடர்ந்து சீறு ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
IT’S CHIKA, MACHA !!! The Swashbuckling South Indian Strokeplay Sensation! 🏏🏆
— Ranveer Singh (@RanveerOfficial) January 12, 2020
Presenting @JiivaOfficial as #KrishnamachariSrikkanth! #ThisIs83@kabirkhankk @deepikapadukone @Shibasishsarkar @madmantena #SajidNadiadwala @vishinduri @ipritamofficial @RelianceEnt @FuhSePhantom pic.twitter.com/adLPV70RAj