மோடியின் பேச்சுக்கு கமல் அதிரடி - ''பிரதமர் பேசுவார்னதும் ரொம்ப எதிர்பார்த்தேன்''
முகப்பு > சினிமா செய்திகள்பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது '' நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பிறப்பிக்கும் கட்டுப்பாடுகளை மதிக்கும் மக்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் , ''வரும் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விடுங்கள். பின்னர் டார்ச் லைட், மெழுகுவர்த்தி போன்றவற்றின் மூலம் ஒளியை பரவவிடுங்கள்.
இதன் மூலம் நாம் தனிமையில் இருந்தாலும், கொரோனாவுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒன்றாகப் போராடி வருகிறோம் என்பதை நிரூபிக்கும். ஞாயிற்றுக்கிழமை விளக்குகளை ஒளிர விடும் போது உருவாகும் பிரகாசம், கொரோனா ஏற்படுத்திய இருளை விரட்டும்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கருத்து தெரிவித்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், டடபிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்'' என்று குறிப்பிட்டார்.
பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 3, 2020