www.garudabazaar.com

அட.. சிவாஜி போல் கமல்.. கமல் போல் அக்‌ஷரா கொடுத்த 'தேவர் மகன்' போஸ்.! இது தீபாவளி ஸ்பெஷல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் உறவினர்கள், சொந்த பந்தங்கள் சூழ அனைவரும் தீபாவளி கொண்டாடினர்.

kamal and akshara hassan Devar Magan Pose viral diwali

கோலிவுட் ஸ்டார்களும் தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடிய தீபாவளி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இவர்களுள் பலரும் தலை தீபாவளியை கொண்டாடுகின்றனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி தன் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. இதே போல் சூர்யா & ஜோதிகா மற்றும் திரையுலக நண்பர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வைரலானது.

இந்த நிலையில் தான் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் தீபாவளி கொண்டாடிய பின் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.  இதனிடையே கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் அண்மையில் வெளியானது. தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2-ஆம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தீபாவளி கொண்டாடி இருக்கும் கமல் மற்றும் அக்‌ஷரா இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் தேவர்மகன் படத்தில் வரும் சிவாஜி போல் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் பின்னால் தேவர் மகன் படத்தில் வரும் கமல் போல அக்‌ஷரா ஹாசன் கைகட்டி கொண்டு பாரம்பரிய உடையில் நிற்கிறார். இந்த போஸ் தேவர்மகன் படத்தின் புகழ்பெற்ற ஸ்டில்லை நினைவுபடுத்துவதாக இருப்பதாக குறிப்பிட்டு இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பட்டு வேட்டி சட்டையில் கமலும், பாரம்பரிய உடையில் அக்‌ஷராவும் இருக்கும் இந்த புகைப்படம் பார்ப்பவர்களை நெகழ வைத்திருக்கிறது.

Tags : Kamal

தொடர்புடைய இணைப்புகள்

kamal and akshara hassan Devar Magan Pose viral diwali

People looking for online information on Kamal will find this news story useful.