bigg boss 6 tamil : “உப்புமா ராணி..” .. ‘மெட்டி ஒலி’ சாந்திக்கு இப்படி ஒரு பட்டமா? ரிவீல் பண்ணிய கமல்..!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரிடமும் பேசிக் கொண்டிருந்த கமல், மெட்டி ஒலி சாந்தியிடமும் பேசினார். பிரபல சீரியல் நடிகையும் டான்சருமான சாந்தி 90களில் புகழ்பெற்ற சீரியலான மெட்டி ஒலி சீரியலின் அறிமுக பாடலில் ஆடி இருப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சில சீரியலில் நடித்து வந்த சாந்தி பிக் பாஸ் வீட்டில் ஒரு முக்கிய போட்டியாளராக இணைந்திருக்கிறார். அவரிடம் கமல் பேசும் பொழுது, “உப்புமா ராணி என்று பட்டம் கொடுத்து வருகிறார்கள் போல.” என்று விளையாட்டாக கேட்கிறார்.
அதற்கு சாந்தி மறுமொழி சொல்லும் பொழுது, “ஆமாம் சார்.. இருக்கிறத வச்சு அதில் எது பெஸ்ட்டோ.. அதை நான் கொடுக்கிறேன் சார்.. ஆனாலும் எனக்குள் தோன்றிக் கொண்டே இருக்கும்.. நேத்துதானே பொங்கல் செய்தோம்.. அடுத்து உடனே பொங்கலா.. நேத்துதானே ரவா உப்புமா செய்தோம்... இன்று இரவும் உப்புமாவா? என்றெல்லாம் தோன்றும்... இருந்தாலும் எங்களால் முடிந்ததை நாங்கள் செய்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.