தனது காதலரையும், அவர் மூலம் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்த பிரபல நடிகை !
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 29, 2019 08:12 PM
வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் காலம் என்ற பாடலில் நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின். இவர் பாலிவுட்டில் வித்தியாசமான வேடங்களின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.
இவர் தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பியானிஸ்ட்டான கை ஹெர்ஸ்பெர்க் என்பவருடன் 2 வருடங்களாக ரிலேசன்ஷிப்பில் இருப்பதாகவும், மேலும் 5 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
நெட்பிளிக்ஸிற்காக இயக்குநர்கள் வெற்றி மாறன், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா இணைந்து அந்தாலஜி என்ற வகைப்படத்தை இயக்கவிருக்கின்றனர். அதில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் கல்கி கோச்சலின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.