'எனக்கு பெண் குழந்தை பொறந்திருச்சு...' - கலக்கப்போவது யாரு நிஷா நெகிழ்ச்சி பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 30, 2019 11:39 AM
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை காமெடியாக சொல்லி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். அவரது ஸ்பெஷலே தனது வட்டார வழக்கு மொழியில் சடசடவென காமெடிகளை பட்டாசாக வெடிப்பது தான்.

இதனால் அவருக்கென்ற தனி ரசிகர் கூட்டம் உண்டு. இதனையடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான 'மாரி 2' படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். தனுஷூடன் இவர் இடம் பெறும் காமெடி காட்சிகள் மிகப் பிரபலம்.
இந்நிலையில் அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'எல்லோருக்கும் வணக்கம். எனக்கு கேர்ள் பேபி பொறந்திருச்சு.... பாப்பாக்கு சஃபா ரியாஸ் னு பெயர் வச்சுருக்கோம். எல்லோரோட ஆசிர்வாதமும் அவருக்கு கண்டிப்பா வேணும்' என்று பதிவிட்டுள்ளார்.
Tags : Nisha, Kalakkapovathu Yaru, Aranthangi Nisha