தங்கமாய் ஜொலிக்கும் காஜல்.. குழந்தை பிறப்புக்கு பின் வைரலாகும் முதல் போட்டோ ஷூட்! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை காஜல் அகர்வால் குழந்தை பிறப்புக்கு பின்னான புதிய போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Kajal Aggarwal First Photoshoot after Childbirth

Also Read | 'விக்ரம்' படத்துல இந்த இளம் தமிழ் சினிமா நடிகை நடிக்கிறாங்களா? ஆஹா சூப்பரு!

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால்,  அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா படம் வெளியானது.

Kajal Aggarwal First Photoshoot after Childbirth

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.  பின்னர் சில நாட்களுக்கு பின் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

Kajal Aggarwal First Photoshoot after Childbirth

பின் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்பட உள்ளது.

Kajal Aggarwal First Photoshoot after Childbirth

அன்னையர் தினத்தில் குழந்தையின் புகைப்படத்தை காஜல் அகர்வால் வெளியிட்டு இருந்தார். மேலும் தற்போது மஞ்சள் உடையில் காஜல் அகர்வால் புதிய போட்டோஷூட்டை நடத்தி உள்ளார். இந்த போட்டோஷூட் வீடியோவும், புகைப்படங்களும் தற்போது இணையதளத்தில் டிரெண்ட் அடித்து வருகின்றன.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

தங்கமாய் ஜொலிக்கும் காஜல்.. குழந்தை பிறப்புக்கு பின் வைரலாகும் முதல் போட்டோ ஷூட்! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal First Photoshoot after Childbirth

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal Latest Pictures, Kajal Aggarwal Photoshoot after ChildBirth will find this news story useful.