www.garudabazaar.com
www.garudabazaar.com

"என்கிட்ட வேணாம்டா".... பாபா பாஸ்கரை கோபப்படுத்திய கயவர்கள்... என்ன நடந்தது..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது. அதிலும் முக்கியமாக புகழுக்கு தனியே நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

baba baskar video about his instagram hack பாபா பாஸ்கரை கோபப்படுத்திய கயவர்கள்

இந்த சீசனை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவகையில் ஆச்சரியத்தை அளிக்கிறார்கள். ஷகிலா தொடங்கி இளம் நடிகரான அஸ்வின் வரை சமைத்து அசத்துகிறார்கள். அதிலும் திரைத்துறையில் பலரையும் ஆட்டுவித்த புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் செய்யும் ரகளை சமையல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது கூட இதையே தான் வழிமொழிந்தார். இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர்  தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஒருவர் எனக்கே தெரியாமல் ஹேக் செய்து விட்டனர். எனது ரசிகர்கள் பலரும் எனது குறை நிறைகளை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டு வந்தனர். அதையெ ல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் யாருக்கோ அது பிடிக்கவில்லை. அதனால் என்னுடைய இன்ஸ்டாகிராம் ஹேக் செய்து விட்டனர்.  எனக்கு அப்படி செய்தவர்களும் நன்றாக இருக்கட்டும். சீக்கிரமே திரும்பி வருவது பற்றி  உங்களுக்கு பதிவிடுவேன்" என்று கூறியுள்ளார்.

"என்கிட்ட வேணாம்டா".... பாபா பாஸ்கரை கோபப்படுத்திய கயவர்கள்... என்ன நடந்தது..? வீடியோ

baba baskar video about his instagram hack பாபா பாஸ்கரை கோபப்படுத்திய கயவர்கள்

People looking for online information on Baba Baskar will find this news story useful.