தெலுங்கு சினிமா ரசிகர்களால் ரவுடி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த 2017 ஆம் ஆண்டில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவை உலகம் முழுக்க திரும்பி பார்க்க வைத்தார்.

வித்தியாசமான காதல் கதையை மையமாக வைத்து இயக்குனர் சந்தீப் வாங்கா இயக்கிய இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. தன் அற்புதமான நடிப்பு திறமையை ஒரே படத்தின் மூலம் வெளிப்படுத்தி காட்டிய விஜய் தேவரகொண்டாவை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் ஸ்கெட்ச் போட்டனர் .
ரெட்டி வங்கா இயக்கிய இப்படத்தில் விஜய் தேவகொண்டாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்த இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே. தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஆதித்ய வர்மா என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியில் உருவாகிவரும் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான 'கபீர் சிங்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக நடிகர் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். ஷாலினி பாண்டே நடித்த வேடத்தில் நடிகை கியார அத்வனி நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் Bekhayali வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இன்று இப்படத்தின் Tera Ban Jaunga
என்ற வீடியோ பாடல் வெளியானது. வரும் ஜூன் 21 ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கின் புதிய வீடியோ சாங் இதோ..! வீடியோ