ஜோதிகா நடிப்பில் கடைசியாக 'காற்றின் மொழி' திரைப்படம் வெளியாகியிருந்தது. ராதா மோகன் இயக்கியிருந்த இந்த படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'பாபநாசம்' இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். மேலும், 'ஜாக்பாட்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடித்துவரும் படம் 'ராட்சசி'. இந்த படத்தை கௌதம் ராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசரில் அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியையாக அனைவரையும் கேள்வி கேட்கும் மிடுக்கான வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.
‘ராட்சசி’ டீசரில் இப்படம் ஜூன் மாத வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் வரும் ஜூலை.5ம் தேதிக்கு தள்ளிப்போவதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி நிறுவனம் வாங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.