Pattamboochi

டிஸ்னியின் மன்னிப்புக் கடிதம்?...301 மில்லியன் டாலர் சம்பளம்?... மீண்டும் jack Sparrow ஆக ஜானி டெப்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜானி டெப் மீண்டும் பைரேட்ஸ் ஆஃப் தி கரேபியன் படத்தில் நடிக்க டிஸ்னி நிறுவனம் அவரை அணுகியுள்ளதாக சொலல்ப்படுகிறது.

Disney reportedly gave apology johnny Depp back as jack sparrow

ஜானி டெப்

1984 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் கால் பதித்த ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத்தந்தது பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸில் அவர் நடித்த 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் தான். ஹாலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஜானி டெப்பிற்கும் நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அடுத்த 15 மாதங்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் 25 வயது வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Disney reportedly gave apology johnny Depp back as jack sparrow

கைவிட்டு சென்ற படங்கள்

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஆம்பர் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயரை ஆம்பர் குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் 6-வது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் சில பட வாய்ப்புகளையும் ஜானி டெப் இழந்தார்.

வழக்கும் வெற்றியும்

இந்நிலையில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். உலகம் முழுவதிலும் இருந்து பலராலும் நேரலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. இதில், ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Disney reportedly gave apology johnny Depp back as jack sparrow

மன்னிப்புக் கடிதம் கொடுத்த டிஸ்னி?

இப்போது ஜானி டெப் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில் அவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அதில் முதல் கட்டமான ‘பைரேட்ஸ் ஆஃப் கரேபியன்-6’ படத்தில் அவரை மீண்டும் நடிக்க டிஸ்னி நிறுவனம் அழைத்துள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. மேலும் டிஸ்னி நிறுவனம், அவருக்கு அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளதாகவும், சம்பளமாக 301 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2500 கோடி ரூபாய்) தர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியாகினும் மீண்டும் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் ஜானி டெப் நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Disney reportedly gave apology johnny Depp back as jack sparrow

People looking for online information on Amber Heard, Disney, Johnny Depp will find this news story useful.