777 Charlie Trailer

DON ஜெயம் ரவி.. POLICE பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? கொலமாஸ் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் அகிலன் திரைப்படத்தின் டீசர் & ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Jayam Ravi Priya Bhavani Shankar Agilan Movie Official Teaser Video Released

Also Read | அஜித் நடிக்கும் #AK61.. 47 நாள் இடைவிடாத படப்பிடிப்பு.. அடுத்தக்கட்ட ஷூட்டிங் இந்த ஊர்லயா?

‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன், ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் தொடங்கி, பின்னர் தூத்துக்குடி வரை நடந்துகொண்டிருந்தது.

ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த இப்படத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வத்திக்குச்சி, காலா, ரைட்டர் படங்களில் நடித்த திலீபன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவை கையாள, விஜய் முருகன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார்.

Jayam Ravi Priya Bhavani Shankar Agilan Movie Official Teaser Video Released

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்திலும் படப்பிடிப்பை இயக்குனர் நடத்தியுள்ளார்.

Jayam Ravi Priya Bhavani Shankar Agilan Movie Official Teaser Video Released

இந்த படத்தில் ஜெயம் ரவி DON ஆக நடிப்பதாக டீசரில் (A1,420) சொல்லப்படுகிறது. மேலும் பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து இன்று இப்படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் 15, 2022 அன்று இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளது என டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | சீனியர் திருச்சிற்றம்பலமாக.. ஜாலியாக செம்ம டான்ஸ் ஆடிய பாரதிராஜா! வெளியான மோஷன் போஸ்டர்!

DON ஜெயம் ரவி.. POLICE பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? கொலமாஸ் டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi Priya Bhavani Shankar Agilan Movie Official Teaser Video Released

People looking for online information on Agilan Movie Teaser, Agilan Movie, Jayam Ravi, Priya Bhavani Shankar will find this news story useful.