ஜெயம் ரவியின் பூமி - விவசாயம் தொடங்கி விஞ்ஞானம் வரை.! வெற லெவலில் மிரட்டும் டீசர் இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜெயம் ரவியின் பூமி பட டீசர் | jayam ravi nidhi agarwal lakshman's bhoomi teaser is out.

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பூமி. ரோமியோ ஜுலியட், போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்‌ஷமன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். நடிகை நிதி அகர்வால் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பூமி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கிராமத்து பின்னணியில் விவசாய பிரச்சனைக்காக போராடுவது போலவும், இதற்கிடையில் விஞ்ஞானமும் கலந்தது போல இந்த டீசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் பூமி பட டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.

ஜெயம் ரவியின் பூமி - விவசாயம் தொடங்கி விஞ்ஞானம் வரை.! வெற லெவலில் மிரட்டும் டீசர் இதோ. வீடியோ

Entertainment sub editor