‘அடங்கமறு’ திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘கோமாளி’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
டெக்னாலஜியின் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் விதமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், 'ஆங்கிலம் படி, ஹிந்தி பேசு ஆனா தாய்மொழி தமிழ் மட்டும் தலைமை தாங்கட்டும்' என்று தொடங்கும் பாடலின் வீடியோ புரொமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் பைசா நோட்டு பாடல் இன்று வெளியாகி உள்ளது .
முன்னதாக இப்படத்தில் 9 விதமான மாருபட்ட தோற்றங்களில் வரும் ஜெயம் ரவியின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
பைஸா நோட்ட உத்து பார்த்தேன் காந்தியத்தான் காணோம்..! - ‘கோமாளி’ லிரிக்கல் வீடியோ இதோ வீடியோ