www.garudabazaar.com

இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டரை பரிசளித்த பிரபல ஜெயிலர் பட நடிகர்! வைரல் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

Jailer actor Jackie Sheroff Gifted a Scooter to Director Nelson

Image Credit - Sun Pictures

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  ஜெயிலர் படத்தின்  படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் நகரில் நடைபெற்றது. ஜெயிலர் படத்தின் தற்போதைய படப்பிடிப்பு மங்களூர் நகரில் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jailer actor Jackie Sheroff Gifted a Scooter to Director Nelson

Image Credit - Nelson Instagram

இந்நிலையில் நடிகர் ஜாக்கி ஷெராப், ஒரு மஞ்சள் நிற ஸ்கூட்டரை இயக்குனர் நெல்சனுக்கு பரிசளித்துள்ளார்‌.  இயக்குனர் நெல்சன், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக நடிகர் ஜாக்கி ஷெராப்புக்கு நன்றி கூறி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்கூட்டர் மீது ஏறி அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Jailer actor Jackie Sheroff Gifted a Scooter to Director Nelson

People looking for online information on Jailer, Nelson, Rajinikanth will find this news story useful.