RRR Others USA
www.garudabazaar.com

"உங்கள பாக்கணும்ன்னு வந்தா.." 'ஜெய்பீம்' சிறுமி வெளியிட்ட வீடியோ.. கண்ணு எல்லாம் கலங்கிருச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஆண்டு, அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் 'ஜெய்பீம்'.

Jaibhim movie fame Joshika instagram video melts hearts

மாலத்தீவு, கோவா போகாம, இந்த வயசுல காசியா? சீரியல் நடிகையின் திடீர் பயணம்.. ரசிகர்கள் ஆச்சரியம்

சூர்யா, லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். மேலும் ஜோஷிகா என்ற குழந்தையும் அல்லி என்ற முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் கடைசி காட்சியில், நடிகர் சூர்யா அருகே கால் மேல் கால் போட்டு அல்லி கதாபாத்திரத்தில் வரும் குழந்தை செய்தித்தாள் படிக்கும் காட்சிகள், சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பினை பெற்றிருந்தது.

மக்களின் அங்கீகாரம்

ஒரு பக்கம், ஜெய்பீம் திரைப்படம் குறித்த அதிக சர்ச்சைகள் உருவாகி இருந்தாலும், பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்க்கையில் உள்ள வேதனைகளை எடுத்துரைத்து, இதுவரை பேசாத கதைக் களத்தை, மக்கள் முன் சமர்பித்ததற்காகவே பல விருதுகளையும், மக்களின் அங்கீகாரத்தையும் இந்த ஜெய்பீம் திரைப்படம் பெற்றிருந்தது.

Jaibhim movie fame Joshika instagram video melts hearts

பிறந்தநாள் வீடியோ

இந்நிலையில், அல்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜோஷிகா மாயா என்ற குழந்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தச் செய்துள்ளது. தன்னுடைய பிறந்தநாள் தினத்தன்று, சாலை ஓரம் ஆதரவின்றி வாழும் ஒரு பெண்ணுக்கு சாக்லேட் கொடுக்கிறார் ஜோஷிகா.

நல்லா படிக்கணும்

அப்போது அருகே இருக்கும் நபர், "இன்னைக்கி அவ பொறந்த நாள். உங்கள ரொம்ப நாளா அவ பாக்க வரலை'ல. அதான், உங்கள பாக்கணும்னு வந்தா. முதல் சாக்லேட்டே உங்களுக்கு தான் குடுக்குறா" என கூறினார். உடனடியாக, அந்த பெண்ணும் மகிழ்ச்சியில் திளைக்க, ஜோஷிகாவுக்கு வாழ்த்தினையும் கூறி, நன்றாக படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

Jaibhim movie fame Joshika instagram video melts hearts

தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கிளம்பும் போது, ஆதரவில்லாத அந்த பெண், சட்டை இல்லை என்றும், வேறு சட்டை வேண்டும் என பரிதாபமாக கேட்கிறார். உடனடியாக, அவர்களும் அடுத்த வாரத்தில் சட்டை வாங்கித் தருவதாக உறுதி அளிக்கின்றனர்.

பாராட்டும் நெட்டிசன்கள்

ஜோஷிகா தன்னுடைய பிறந்தநாள் தினத்தன்று, ஆதரவில்லாமல் சாலை ஓரம் வசிக்கும் பெண்மணி ஒருவருக்கு, முதலாவதாக சாக்லேட் கொடுத்து, அவருக்கு ஆடைகள் வாங்கித் தருவதாக கூறியுள்ள சம்பவம், காண்போரை கலங்க வைத்துள்ளது.

 

ஜோஷிகாவிற்கு வாழ்த்துக்களைச் சொன்ன நெட்டிசன்கள், சிறு வயதிலேயே இருக்கும் அவரது சிறந்த பண்பையும் பாராட்டி வருகின்றனர்.

"ஸாரி சொல்லியிருக்கலாமே?".. பாலாவிடமே கேட்டுவிட்ட சிம்பு.. இந்த வார பரபரப்பு BBUltimate!

Jaibhim movie fame Joshika instagram video melts hearts

People looking for online information on சூர்யா, ஜெய்பீம், லிஜோமோள் ஜோஸ், Jaibhim movie, Jaibhim movie fame Joshika, Joshika will find this news story useful.