RRR Others USA
www.garudabazaar.com

“7 வருஷத்துக்கு அப்புறம் வர்றேன்”… சூப்பர் அப்டேட் கொடுத்த பிரேமம் இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கோல்ட் படத்தின் டீசர் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Premam director alphonse puthren gold teaser announcement

இதுவரை இல்லாத நாளில் ….பீஸ்ட் ரிலீஸில் இந்த வித்தியாசத்த கவனிச்சீங்களா?

தென்னிந்தியாவைக் கலக்கிய பிரேமம்…

தமிழ் சினிமாவில் குறும்பட உலகில் இருந்து வந்து கவனம் ஈர்த்தவர்களில் அல்போன்ஸ் புத்ரன் முக்கியமானவர். இவர் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். அடுத்து 2 வருடங்கள் கழித்து அவர் இயக்கிய பிரேமம் (2015) தென்னிந்தியா மொழிகளில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்த மூவருமே இப்போது தென்னிந்திய சினிமாக்களின் முன்னணி நடிகைகளாக உள்ளனர். அல்போன்ஸ் திரையுலகில் நுழைந்து 10 ஆண்டுகள் நெருங்கினாலும் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களிலேயே பரவலான சினிமா ரசிகர்களின் விருப்ப இயக்குனராக உள்ளார்.

Premam director alphonse puthren gold teaser announcement

பிரேமத்துக்குப் பின் இடைவெளி

பிரேமம் படத்துக்கு பின் தான் இயக்கபோகும் படமாக பாட்டு என்ற படத்தை அறிவித்தார். அந்த படத்தில் பஹத் பாசில் மற்றும் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அந்த படத்துக்காக இசைக் கற்றுக்கொண்டதாகவும், அந்த படத்துக்கு தானே இசை அமைக்க உள்ளதாகவும் அல்போன்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது பாட்டு படத்துக்கு முன்னதாக அவர் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கியுள்ளார்.

Premam director alphonse puthren gold teaser announcement

பிருத்விராஜோடு கோல்ட்…

இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். GOLD படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். கோல்ட் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இருக்கும் படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரன் இப்போது கோல்ட் படத்தின் டீசர் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

Premam director alphonse puthren gold teaser announcement

7 ஆண்டுகளுக்குப் பிறகு

இதுபற்றி அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘ஒரு 7 ஆண்டு சிறிய இடைவெளிக்குப் பிறகு நான் என்னுடைய கோல்ட் படத்தின் மூலம் திரும்பி வருகிறேன். கோல்ட் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு மேஜிக் ப்ரேம்ஸ் சானலில் வெளியாகிறது. மார்ச் 25 ஆம் தேதி முதல் கோல்ட் டீசர் திரையரங்குகளில் வெளியாகும். உங்கள் அனைவரின் அன்பும் பிராத்தனைகளும் வேண்டும். டீசரை பார்த்துவிட்டு சொல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார். பிரேமம் என்ற மெஹா ஹிட் படத்துக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழி ரசிகர்களும் அதைக் காண ஆவலாக உள்ளனர்.

போடு சக்க! அஜித்தின் வலிமை.. வெளியானது ஓடிடி டிரைலர்! இது செம்ம மாஸா இருக்கே….

Premam director alphonse puthren gold teaser announcement

People looking for online information on Alphonse Puthren, Director alphonse puthren, Gold Movie, Gold teaser, Premam director will find this news story useful.