www.garudabazaar.com

“ஜெயிச்சிட்ட மாறா.. ”.. சூர்யா-வின் சூரரைப் போற்று-க்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கோரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடிப்பில் சூரரைப் போற்று படம் அமேசானில் வெளியாகி செம ஹிட் அடித்தது.

Suriya Soorarai Pottru IFFM award சூர்யா சூரரைப் போற்று விருது

பிரபல ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவான இந்த படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் (Indian Film Festival Of Melbourne) சூரரை போற்று திரைப்படத்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறந்த இயக்குநர் பிரிவில் ‘சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயரும், சிறந்த நடிகர் பிரிவில் சூர்யா பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. 

இந்தியாவில் இருந்து 26 மொழிகளில் சுமார் 100 படங்கள் இங்கு திரையிடப்பட உள்ளதாகவும் தெரிகிறது.  முன்னதாக ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: "வாரே.. வா..".. தியேட்டரில் ரிலீஸ் .. ‘மார்வெல் ஸ்டூடியோவின்’ ஆசிய சூப்பர் ஹீரோ படம்! மாஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Soorarai Pottru IFFM award சூர்யா சூரரைப் போற்று விருது

People looking for online information on Aparna Balamurali, Sudha Kongara, Suriya will find this news story useful.