www.garudabazaar.com

"கொஞ்சம் ஓவர்தான்.. இந்த பொண்ணு டக்குனு மாறிடுச்சு".. ஹவுஸ்மேட்ஸ் பேசிக்கொண்ட கிசுகிசு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் இசைவாணிக்கு பிக்பாஸ் காயின் டாஸ்கின் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டின் கிச்சன் பொறுப்பினை கொடுத்தார்.

isaivaani under critics by imman and housemates biggbosstamil5

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சில அதிரடி மாற்றங்களை செய்யப்போவதாகக் கூறி இசைவாணி வலம் வரத் தொடங்கினார். அதன்படி கிச்சனில் சென்று ஏன் இவ்வளவு எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்? என்பன போன்ற கேள்விகளை தாமரையிடம் சற்றே கடுமையாக கேட்கத் தொடங்கினார்.

அப்போது தாமரை கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தபடி, எண்ணையை வடிகட்டி திரும்பியும் பயன்படுத்தலாம் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த இசைவாணி, இனி யாரும் தன்னை கேட்காமல் எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என கூறி எண்ணெயை எடுத்து வைத்துக்கொண்டார்.

isaivaani under critics by imman and housemates biggbosstamil5

இதேபோல் நிரூப், புளியை கரைத்து வைத்து இருந்ததை பார்த்த இசைவாணி, எதற்காக இதை இப்படி செய்து வைத்து இருக்கிறீர்கள்? இப்போது தேவையில்லையே இது? என்று கூறியதும், இதற்கு பதில் அளித்த நிரூப், இதை நாம் முடிவு செய்யவில்லை.. திடீரென திட்டம் மாறி விட்டது. இந்த புளியை நாம் பிரிட்ஜில் வைத்து விடலாம் என்று கூறி இசை வாணியை சமாதானப்படுத்துகிறார்.

isaivaani under critics by imman and housemates biggbosstamil5

இதனிடையே பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் நீண்ட நாட்கள் கழித்து உறங்கும் அறையில் ஒன்றாக அமர்ந்து கலகலவென பேசிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது இமான் அண்ணாச்சி, இசைவாணி நடந்து வருவது போலும், பேசுவது போன்றும் செய்து காட்டினார்.

குறிப்பாக, “இசைவாணியிடம் இந்த பொறுப்புகள் கொடுக்கப்பட்டதும், அவருடைய தோரணை மாறிவிட்டது. இப்போது ஜோக் சொன்னால் கூட சிரிக்க மாட்டார். வேண்டுமானால் யாராவது சொல்லி பாருங்கள்” என்று இமான் குறிப்பிட்டிருந்தார்.

isaivaani under critics by imman and housemates biggbosstamil5

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இசைவாணியின் இந்த திடீர் மாற்றம் பற்றி குறிப்பிட்ட இமான், சிபி உள்ளிட்டோர் அவரை நாமினேட் செய்து அவருடைய புகைப்படத்தை நெருப்பில் போட்டு பொசுக்கினர். இதேபோல் இசையும் இமான் அண்ணாச்சியை நாமினேட் செய்து இருக்கிறார். இதனிடையே இசைவானி குறிப்பிடும்போது, “பொறுப்பு என்று வரும்பொழுது நாம் அதை சரியாக செய்ய வேண்டும் என்கிற ஒரு சிந்தனை தான் எனக்கும் இருக்கிறது!” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

isaivaani under critics by imman and housemates biggbosstamil5

People looking for online information on இசைவாணி, BiggBossTamil5, Immanannachi\, Isaivani will find this news story useful.