நம்ம லிஸ்ட்லயே இல்லயே?.. இது கனவா இல்ல நனவா?.. ஷாக் கொடுத்த நிரூப் - அபிஷேக் - பிரியங்கா?
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் ப்ரோசஸ் தீவிரமாகி உள்ளது. முன்னதாக லைக்ஸ், டிஸ்லைக்ஸ் டாஸ்க்குகளை கொடுத்த பிக்பாஸ் தற்போது ஒரே ஒரு காயின் டாஸ்க் கொடுத்திருந்தது.

ஆம், ‘பஞ்ச தந்திரம்’ என்கிற இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் நாணயங்களை எடுத்துவைத்து நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு உதவலாம். இதனால் அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் நாணயங்களை எடுத்து வைத்துக்கொண்டு உதவி செய்தனர்.
சிலர் குழுவாக இணைந்து நாணயங்களை எடுத்தனர். சிலர் குறிப்பிட்ட ஒருவருக்கு நாணயம் கிடைக்கவிடாமல் செய்யவும் முயற்சித்தனர். இதனையடுத்து தற்போது பிக்பாஸ் வீட்டில் யார் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு வாக்கு போட சொல்லி பிக்பாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
இதில் நிரூப், அபிஷேக் மற்றும் பிரியங்கா மூவரும் தங்களுக்குள் அளித்துள்ள வாக்குகள் வைரலாகி வருகின்றன. இவர்கள் 3 பேரையும் தனித்தனியா பார்க்க முடியாது. எப்போதும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.
அதன்படி, இரவில் தூங்குவதற்கு நன்றாக நேரம் கொடுத்தும் தூங்காமல், இரவு முழுவதும் கதை பேசிசிட்டு பகலில் தூங்குபவர்களின் லிஸ்டில் அபிஷேக் நிரூபை நாமினேட் செய்துள்ளார்.
அதன் பின்னர் பிரியங்கா இதே விஷயத்துக்காக, “நிரூப் தான்” என்று கூறி நாமினேட் செய்து ஓட்டு போடுகிறார்.இதேபோல் அதிக ஆங்கில வார்த்தை பேசுபவர்களின் லிஸ்டிற்கு பிரியங்கா மற்றும் அபிஷேக் இருவருமே நிரூபை நாமினேட் செய்தனர்.
இதேபோல் மைக்கை சரியாக மாட்டுவதில்லை என்கிற லிஸ்டில் பிரியங்கா மற்றும் அபிஷேக்கும், பகலில் தூங்குபவர்கள் லிஸ்டில் நிரூப் மற்றும் பிரியங்காவை பலரும் நாமினேட் செய்தனர்.