www.garudabazaar.com

பிரபல 'Friends' டிவி சீரியல் நடிகர் மரணம்.. கண்ணீர் வடித்து கதறும் ரசிகர்கள்! என்ன நடந்தது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஃப்ரெண்ட்ஸ் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் மைக்கேல் டைலர்.

Friends tv show actor James Michael Tyler dies fans shocked

இவருக்கு 59 வயது ஆகும் நிலையில் இவர் தற்போது காலமாகியுள்ளார். உலகம் முழுவதும் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆங்கில தொலைக்காட்சி தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ள நிலையில், இந்தத் தொடரில் குந்தர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஜேம்ஸ் மைக்கேல் டைலர்.

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த ஜேம்ஸ் மைக்கேல் டைலர் மரணம் அடைந்ததை அவரின் மேனேஜர் உறுதி செய்துள்ளார். ஜேம்ஸ்க்கு ஜெனிஃபர் கார்னோ என்கிற மனைவி உள்ளார். கடந்த 2018-ல் ஜேம்ஸ்க்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அது எலும்புக்கும் பரவியது.

ஃப்ரெண்ட்ஸ் ரியூனியனிலும் நடித்த ஜேம்ஸ், ஃப்ரெண்ட்ஸ் தொடரில் நடித்த 10 ஆண்டுகள் தன் வாழ்வின் சிறந்த நேரம் என்று குறிப்பிட்டார். இதனிடையே 1994-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டுவரை ஒளிபரப்பான ஃப்ரெண்ட்ஸ் தொடரில் சுமார் 150 எபிசோடுகளில் வந்த ஜேம்ஸை மிஸ் பண்ணுவோம் என்று ஜெனிஃபர் அனிஸ்டன் தமது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஃப்ரெண்ட்ஸ் தொடரில் ரேச்சலிடம் குந்தர் ப்ரொபோஸ் பண்ணும் வீடியோவையும் அனிஸ்டன் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Friends tv show actor James Michael Tyler dies fans shocked

People looking for online information on Friends, FriendsReunion, JamesMichaelTyler will find this news story useful.