வலிமை: நாளை வெளியாகும் வலிமை படத்தில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் நிறைய உள்ளன.
வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக வலிமை திகழ்கிறது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
வலிமை படத்தின் கேமரா:
வலிமை படம் பிரசித்தி பெற்ற ARRI Alexa கேமரா கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவின் விலை 98,200 USD டாலர் ஆகும். 2011 இல் "ஹ்யூகோ", 2012 இல் "லைஃப் ஆஃப் பை", 2013 இல் "கிராவிட்டி", 2014 இல் "பேர்ட்மேன்", 2015 இல் "தி ரெவனன்ட்" மற்றும் "ஸ்பாட்லைட்", 2016 இல் "மூன்லைட்", "தி ஷேப் ஆஃப் வாட்டர்" மற்றும் 2017 இல் "பிளேட் ரன்னர் 2049", 2018 இல் "கிரீன் புக்" மற்றும் "ரோமா" மற்றும் 2019 இல் "பாராசைட்" மற்றும் "1917" ஆகிய படங்கள் இந்த கேமராவை கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. அஜித்தின் என்னை அறிந்தால் படமும் இந்த ARRI Alexa கேமராவை கொண்டு எடுக்கப்பட்டது தான்.
வலிமை படத்தின் ரிக்:
ரிக் எனும் கேமரா தாங்கி வலிமை படத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திலீப் சுப்பராயன் டிவீட் செய்துள்ளார். அதில், "வலிமை படத்தின் ஸ்பெஷல் ஸ்டண்ட் ரிக், டிஎஸ் ரிக்கிங் சொல்யூஷன் மூலம் கார் ரிக் மற்றும் பைக் ரிக் தயாரிக்கப்பட்டுள்ளது. நாளை பிப் 24 ஆம் தேதி வெள்ளித்திரையில் வேகத்தை உணருங்கள்" என டிவீட் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பைக், கார் சேசிங் காட்சிகளில் சமமான இணை வேகத்தில் (Parallel Speed) படமாக்கப்பட்டுள்ளன.
வலிமை படத்தின் ASPECT RATIO:
ஒரு படத்தின் Aspect Ratio என்பது திரையில் தோன்றும் பிம்பத்தின் அகலத்திற்கும் உயரத்திற்கும் உள்ள விகிதமாகும், x:y விகிதத்திற்கு, x அகலமாகவும் y உயரமாகவும் இருக்கும். பொதுவான விகிதங்கள் சினிமா ஒளிப்பதிவில் 1.85:1 மற்றும் 2.39:1, 4:3 மற்றும் 16:9 என பல விகிதங்கள் உள்ளன.
சினிமாவை பொறுத்தவரை 2.39:1 என்ற விகிதத்தில் அதாவது 2.39 அகலம், 1 உயரம் என திரை இருக்கும். தியேட்டரில் இந்த விகிதத்தில் தான் நாம் சினிமா படங்களை பார்க்கிறோம். இதில் வலிமை படத்தில் 2.66:1 என்ற விகிதத்தில் அதாவது 2.66 அகலம், 1 உயரம் என திரை இருக்கும்.
மேலும் ப்ளாஸ் பேக் காட்சிகளுக்கு 4:3 (1.33) என Aspect Ratio இருக்கும். ப்ளாஸ்பேக் காட்சிகள் 30, 40 வருடங்களுக்கு முன்பு நடப்பது போல இருப்பதாலும் அந்த காலக்கட்டத்தில் 4:3 Aspect Ratio தான் பயன்படுத்தப்பட்டதாலும் பல இயக்குனர்கள் இந்த உத்தியை உலக சினிமாக்களில் பயன்படுத்துகின்றனர்.
வலிமை சவுண்ட் சிஸ்டம்
வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனியில் நடந்தன. இந்த சவுண்ட் மிக்ஸிங்காக தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் பணிபுரிகிறார்.
வலிமை வினியோகஸ்தர் ராகுல் பிரத்யேகமாக நமது BEHINDWOODS சேனலுக்கு அளித்துள்ள EXCLUSIVE செய்தியில் முக்கிய தகவலை கூறியுள்ளார். அதில், "தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் ஆடியோ சிஸ்டத்தை மேம்படுத்தியுள்ளன, ஆனால் சில இடங்களில் ஆடியோ லெவல்கள்/வால்யூம் சரியான ஒலி தரத்துடன் பொருந்தவில்லை. வலிமை படத்தின் ஆடியோ 11:1 ஒலி கலவையில் நன்றாக வந்துள்ளதால், படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்க திரையரங்க உரிமையாளர்களிடம் வலிமை படத்தின் ஒலி தரத்திற்கு ஏற்றவாறு திரையரங்க ஒலி அமைப்பை மாற்றி வைக்க நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்" - என ராகுல் தெரிவித்துள்ளார்.
வலிமை படத்தின் சவுண்ட் அமைப்பு, திரையரங்க அனுபவம் குறித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை மறக்காமல் பார்க்கவும்.
வலிமை படத்தில் இவ்வளவு டெக்னிக்கல் விஷயம் இருக்கா? இது வேற லெவல் சம்பவம் வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Huma Qureshi Reveals About Working With Ajith Kumar In Valimai And How She Missed A Chance In Billa 2
- Valimai Movie Actress Huma Qureshi About Ajith Kumar
- 10 Reasons Why We Should Watch Valimai In Theatres
- H Vinoth First Time Talks About Valimai Movie Theater Experience
- Valimai Ajith Father Character Played By This Legendary Actor
- Is This Late Legendary Actor Playing The Role Of Ajith Kumar's Father In Valimai? Interesting Details Ft Jai Shankar
- Exclusive Interview Of Valimai Director H Vinoth In Behindwoods Ft Ajith Kumar, Boney Kapoor, Huma Qureshi, Part 2
- Director Venkat Prabhu Gets Ajith Valimai Movie FDFS Tickets
- Exclusive Interview Of Valimai Director H Vinoth In Behindwoods Ft Ajith Kumar, Boney Kapoor, Huma Qureshi
- Ajith Valimai Director H Vinoth Exclusive Interview Part 2
- Ajith Valimai Release Director H Vinoth Exclusive Interview
- Valimai Distributor Gopuram Films Anbu Chezhiyan Daughter Marriage Function
தொடர்புடைய இணைப்புகள்
- H. Vinoth - First Valimai Director Speech | Ajith
- "பிணத்துல புழுவெல்லாம் சுத்தும்" அனாதை பிணங்களை அடக்கம் செய்யும் Real பிதாமகள்
- നിങ്ങൾക്ക് ഞാൻ സുന്ദരി ആണെന്ന് തോന്നണമെന്നില്ല. പക്ഷേ...😄😄😄
- "വലിമൈ" ചിത്രത്തിലൂടെ പേളി മാണി തമിഴിലേക്ക്. അജിത്തിനെ കണ്ടുമുട്ടിയ വിശേഷങ്ങൾ പങ്കുവച്ച് നടി.
- 'Valimai Ticket-க்காக முண்டியடித்த கூட்டம்'.. குலுங்கிய பிரபல தியேட்டர்..! தெறிக்கவிட்ட ரசிகர்கள்
- "Valimai-னு Leak ஆயிடுச்சு, Ajith Fans-க்கு தெரிஞ்சிருச்சு, அவ்ளோதான்…" - Villain Dhruvan Interview
- ട്രോളന്മാർ എന്നെ Avoid ചെയ്യുകയാണോ?|Pearle Maaney Funny Reaction| Exclusive Interview
- அந்த அழகன் Ajith இனிமேல்...❤️ ஓட வேண்டிய படத்த இப்படி பண்ணிட்டியேனு திட்டுனாங்க - VZ Durai
- ஐயோ! என்ன அழகு, என்ன Aura 😍 Valimai Ajith-அ ரசிச்சு புகழ்ந்து தள்ளிய @Pearle Maaney Interview | AK
- Ajith Valimai Shooting-ல நடந்த இந்த விஷயத்த சொல்லலாமான்னு தெரில - Huma Qureshi Interview
- 'அஜித் Fans மட்டும்'.. AK-வின் அசாத்திய திறமை🔥 ரகசியம் உடைத்த வலிமை வில்லன்😍 வேற மாறி வேற மாறி
- ரகசிய பூஜை நடத்திய ராம்ஜி ஸ்வாமி.. ஸ்ரீ மடத்தில் நடப்பது என்ன? எந்திர மாந்திரீக Secret