தமிழில் பாடகியாக அறிமுகமாகும் ’அசுரன்’ Heroine… அவரே வெளியிட்ட cute வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.

Asuran fame manju warrier sung a tamil song in new movie

Also Read | Repeat Mode-ல் கமல் & அனிருத் மேஜிக் ‘பத்தல பத்தல’… Milestone வியூஸ்… லேட்டஸ்ட் தகவல்!

மஞ்சு வாரியர் ரி எண்ட்ரி…

மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்தவர் மஞ்சுவாரியர். திருமண வாழ்க்கைக்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் சில வருட இடைவெளிக்குப் பின் நடித்த ‘HOW OLD ARE YOU’ திரைப்படம் பாராட்டுகளைக் குவித்தது. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அசுரன் திரைப்படத்தில் ‘பச்சையம்மாள்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Asuran fame manju warrier sung a tamil song in new movie

அசுரன் பச்சையம்மாள்…

கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்து தனுஷ் நடித்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் 'அசுரன்'. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும்  வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோருக்கு தேசிய விருதுகளும் கிடைத்தன.

Asuran fame manju warrier sung a tamil song in new movie

அஜித் 61…

இதையடுத்து தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் அஜித்தின் 61 ஆவது படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார். இதை அவரே உறுதி செய்துள்ளார். இந்நிலையில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் யோகி பாபு, மஞ்சுவாரியர் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘செண்ட்டிமீட்டர்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் வெளியாக் உள்ளது.

Asuran fame manju warrier sung a tamil song in new movie

பாடகி அவதாரம்…

இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் மஞ்சு வாரியர் ஒரு பாடலை பாடியுள்ளார். இதுவே அவர் பாடும் முதல் தமிழ் பாடலாகும். இந்நிலையில் அந்த பாடல் பற்றி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மஞ்சு வாரியர், மேலும் அந்த பாடலின் சில வரிகளையும் பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Asuran fame manju warrier sung a tamil song in new movie

People looking for online information on Asuran, அசுரன், மஞ்சு வாரியர், Manju Warrier, Manju warrier new Movie will find this news story useful.